மேச்சேரி: மின்னல் தாக்கி பசு, கன்றுக்குட்டி சாவு

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே புக்கம்பட்டி மேல் கட்டையன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 60), விவசாயி. இவர் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பசுமாடு, கன்று குட்டியை மரத்தில் கட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். அப்போது இடி- மின்னலுடன் மழை பெய்தது. மரத்தில் கட்டியிருந்த பசுமாடு, கன்றுக்குட்டி மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தன. அதிகாலையில் எழுந்து வந்த விவசாயி, மாடும், கன்றுக்குட்டியும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கண்ணீர் விட்டு அழுதார். தகவல் அறிந்த மேட்டூர் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கவுசிகுமார், புக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி