இந்த ஏலத்தில் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பூலாம்பட்டி, வனவாசி, பெருந்துறை, நரியம்பட்டி, சின்னானூர், வாத்திப்பட்டி, ஊத்துக்குளி, விஜயமங்கலம், வாழப்பாடி, அந்தியூர், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய் பருப்பை ஏலத்துக்கு கொண்டுவருவார்கள்.
நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 354 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. தேங்காய் பருப்பு முதல்தரம் கிலோ ரூ. 190.95 முதல் ரூ. 241.10 வரையும், இரண்டாம் தரம் கிலோ ரூ. 110.80 முதல் ரூ. 187 வரையும் விற்பனையானது. சுமார் ரூ. 32 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது என்று கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலர் ராஜகோபால் தெரிவித்தார்.