ஜலகண்டாபுரத்தில் ரூ. 14 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க உப கிளை ஜலகண்டாபுரத்தில் நேற்று செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 206 மூட்டைகள் வரத்து இருந்தன. முதல்தரம் கிலோ ரூ. 141.70 முதல் ரூ. 194.10 வரையிலும், 2-ம் தரம் கிலோ ரூ. 80.80 முதல் ரூ. 117.95 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 14.08 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றதாக அலுவலர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி