மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு பஸ் வசதி

மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் சதாசிவம் எம். எல். ஏ. பலமுறை வலியுறுத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக 5 மாவட்ட மக்கள் பயன்அடையும் வகையில் திருப்பதிக்கு பஸ் விடப்பட்டுள்ளது. இந்த பஸ், கோவையில் இருந்து புறப்பட்டு சத்தியமங்கலம், அந்தியூர் வழியாக நேற்று இரவு 10 மணிக்கு மேட்டூர் வந்தடைந்தது. பஸ்சை சதாசிவம் எம். எல். ஏ. வரவேற்று திருப்பதிக்கு வழி அனுப்பி வைத்தார். பஸ்சில் பயணம் செய்த அனைவருக்கும் இனிப்பு, குடிநீர் பாட்டில்களை சதாசிவம் எம். எல். ஏ. வழங்கினார். டிரைவர், கண்டக்டர் பாதுகாப்பாக பஸ்சை இயக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
மேலும் சதாசிவம் எம். எல். ஏ. நிருபர்களிடம் கூறுகையில், மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு கட்டணமாக 410 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்த பஸ்சில் முன்பதிவு மூலமும், முன்பதிவு செய்யாத நிலையில் இருக்கை காலியாக இருந்தால் நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்யலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி