சேலத்தில் அதிகாலையில் பற்றி எரிந்த பிரியாணி கடை

சேலம் நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பிரியாணி கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் ஆனது. தகவல் அறிந்த வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக அதிகாலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி