மேட்டூர் பஸ்களில் பயன்படுத்தப்பட்ட ஏர்ஹாரன்கள் பறிமுதல்

மேட்டூர் அனல் மின் நிலையம் மற்றும் 4 ரோடு ரவுண்டானா பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் ராம் தலைமையில் அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், 30 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 3 பஸ்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி