கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.