மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீஸ் குழுவினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, உருட்டு கட்டை மற்றும் மடக்கு கத்தியுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், மூர்த்தி (35), வசந்த் (38), ஜீவா (28), சரத் என்கிற சரத்குமார் (25), ராஜா (40) ஆகியோர் கொள்ளையடிக்கும் நோக்கில் இருந்ததும், பாக்கெட்டில் மிளகாய் பொடி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.