கொளத்தூர்: யானை தந்தங்கள் வைத்திருந்த 5 பேர் கைது

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த ஏழரைமரத்துக்காடு பகுதியில் மேட்டூர் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த கோவிந்தபாடியை சேர்ந்த பழனி (வயது 48), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), குரும்பனுரை சேர்ந்த பெருமாள் (50), ஏழரைமரத்துக்காடு பகுதியை சேர்ந்த ஒண்டியப்பன் (59), வாழப்பாடியைச் சேர்ந்த அருணாசலம் (45) ஆகிய 5 பேர் இருந்தது தெரிய வந்தது. 

அவர்கள் காரில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மேட்டூர் வனத்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். யானைத் தந்தத்தை விற்பனை செய்யும் நோக்கில் எடுத்து வந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி