மேட்டூர் அருகே வனவாசியில் ஜனவரி 9ஆம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தாத நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் சமரசத்திற்குப் பிறகு பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.