சேலம் சின்னகொல்லப்பட்டியில் கட்டிட தொழிலாளி செல்லப்பெருமாளிடம் தீப்பெட்டி கேட்ட தகராறில், தரணீஸ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் அவரை பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த செல்லப்பெருமாள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தரணீஸ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.