சேலம் ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா (19) கடந்த 1ம் தேதி தோழியின் வீட்டிற்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.