தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடையை 12 மணிக்கு திறக்கப்படும் நிலையில் முன்னதாக கள்ளச் சந்தையில் சிலர் மது பாட்டில்களை விற்பனை செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட வீ.ராமநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வீட்டில் மது பாட்டில்களை வைத்து பெண் ஒருவர் விற்பனை செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. வீடியோவில் அந்த பெண் பணத்தைப் பெற்றுக்கொண்டு மது பாட்டில்களை கொடுப்பதும், அவரது வீட்டின் பகுதியில் கால்களில் மது பாட்டில்கள் இருப்பதும் உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.