தலைவாசல் கார், டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதி விபத்து

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சம்போரி பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி மினி சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சொகுசு கார் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, காரில் பயணம் செய்தவர்களும் மினி சரக்கு வாகனத்தில் சென்றவர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தலைவாசல் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி