சேலம்: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; பரபரப்பு தகவல் (VIDEO)

சேலம் மாவட்டம்கெங்கவல்லி நடுவலூர் ஏரிக்குச் செல்லும் நீர்வழி வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் ஆக்கிரமைப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என தெரிவித்திருந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது எனக்கூறி ஆத்தூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது திமுக உறுப்பினர்கள் அட்டையினையும் சாலையில் வீசி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி