கெங்கவல்லி குடிநீர் கேட்டு சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பெரம்பலூர் பிரதான சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி