அப்போது சாலையின் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஆசிரியர் அபிஷேக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.