தலைவாசல் அருகே கூலித் தொழிலாளி லட்சுமணன், அதே பகுதியைச் சேர்ந்த பூபதியின் மனைவியுடன் பழக்கம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த பூபதி மற்றும் அவரது உறவினர்கள் லட்சுமணனை எச்சரித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கரிகாலன் மற்றும் சிவராஜ் ஆகியோர் லட்சுமணனை கல்லால் தாக்கியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கரிகாலனை கைது செய்து மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.