சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் பள்ளக்காடு சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள ஐந்து மலை முருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் கும்பாபிசேக விழா கடந்த 1ஆம் தேதி முகூர்த்த நேரத்தில் நடுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நேற்று மாலை கோவில் வளாகத்தில் யாகசாலையில் யாக பூஜைகள் செய்து பல்வேறு புனிதஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு பூஜை செய்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்கி ஊர் முக்கியஸ்தர்கள் புனித நீரை தலையில் சமந்தவாறு மேளதாளங்கள், வாத்தியங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோபுர கலசத்திற்கும் முருகப்பெருமானுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.