கெங்கவல்லி: மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அகில இந்திய மூத்தக்குடி மக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தாலுக்கா அலுவலகம் முன்பு பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காப்பீட்டுத் தொகையை 3 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும், வேலை வாய்ப்புகள் தாமதமாக வழங்குவதால் வேலை செய்யும் ஆண்டுகள் குறைந்து வருகிறது. இந்நிலையை அரசு பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் முழங்கி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி