கெங்கவல்லி கனமழை மரங்கள் சாலையோரம் விழுந்து விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கொத்தம்பாடி, ராமநாயக்கன்பாளையம், அழகாபுரம், ஆணியம்பட்டி, தெடாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரம் இருந்த மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த மழையால் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தொடர்புடைய செய்தி