சேலம் மாவட்டம் கெங்கவல்லி, ஆணையம்பட்டி, கூடமலை, கொண்டைம்பள்ளி, பள்ளக்காடு, ஒதியத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகள் தெரியாமல் இருள் சூழ்ந்தது போல் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாகச் சென்றனர். காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் பொதுமக்களும் பனிமூட்டத்தால் வீட்டில் முடங்கினர். இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.