கெங்கவல்லியில் குட்கா விற்பனை: பெட்டிக்கடைக்காரர் கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் மளிகை கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கெங்கவள்ளி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று கெங்கவல்லி போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவன் கோவிலுக்கு அருகே சந்திரசேகர் (63) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 900 ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தபோது போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி