கெங்கவல்லி இருதரப்பு மோதல் விவகாரம் த.வெ.க., நிர்வாகி கைது

சேலம் மாவட்டம் தெடாவூரில் கோவில் விழாவின் போது ஏற்பட்ட மோதலில், தமிழக வெற்றி கழக நகர செயலாளர் அருண் உட்பட 15 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த நகர செயலாளர் அருண் கைது செய்யப்பட்டார். பழனி முருகன் என்பவரது காளை, அஜய் என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அஜய்க்கு ஆதரவாக அருண், பழனி முருகன் குடியிருப்பு பகுதிக்கு சென்று அவரது ஆதரவாளர்களை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி