கெங்கவல்லி: சலவை தொழிலாளி வீட்டில் தீ விபத்து

கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி வெள்ளையன் (60) என்பவரது வீட்டில், மின்கசிவு காரணமாக குளிர்சாதனப்பெட்டி வெடித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்ட சலவைத் துணிகள், ஏழு சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி