ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் பகுதியில் சக்திவேல் வசித்து வரும் கூரை வீட்டில் பிப்.12 மாலை தீ விபத்து ஏற்பட்டது. வேலை முடிந்து வீடு திரும்பிய சக்திவேல் வீட்டில் கரும்புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், 10 நெல் மூட்டைகள், அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்கள் முற்றிலும் சேதமடைந்தன.