தம்மம்பட்டி பேரூராட்சியில் மாமன்ற கூட்டம் புறக்கணித்து தர்ணா

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி மன்ற தலைவி கவிதா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மூன்று மாதங்களுக்கு முன் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று மாதாந்திர பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த வார்டு உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நுழைவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி மன்ற தலைவி தங்கள் வார்டு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி