சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த 51 வயது கூலித்தொழிலாளி ராஜா, திருச்சி சோபனபுரத்தில் அம்மாவைப் பார்க்கச் சென்றபோது பேரிகார்டில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். பின்னர், தம்மம்பட்டியில் அவரது உடலுக்கு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, வட்டாட்சியர் நாகலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.