கெங்கவல்லி மஹா சிவராத்திரி பக்தர்கள் தரிசனம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுவேத நதிக்கரை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி