சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிகண்டனின் விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு தவறுதலாக கிணற்றில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை கயிற்றுடன் உயிருடன் மீட்டனர். பின்னர் மாட்டை அதன் உரிமையாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். விவசாயி தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.