மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிறந்த செயலாளர்களுக்கு பரிசு

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள லத்துவாடி, காட்டுக்கோட்டை, நாவக்குறிச்சி, இழுப்பநத்தம், தலைவாசல் உள்பட 7 ஊராட்சிகளில் கடந்த ஜூலை மாதம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. ஒரு முகாமில் 5 ஊராட்சி வீதம் 7 முகாம்களில் 35 ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தலைவாசல் ஒன்றியத்தில் 35 ஊராட்சி செயலாளர்கள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக சேலம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் உமா நந்தினி, தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் பாராட்டி நினைவு பரிசை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி