சேலம் மாவட்டம் கொண்ட பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64), விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளை தம்மம்பட்டி காவல் நிலையம் எதிரில் உள்ள பூச்சி மருந்து கடைக்குச் சென்றுள்ளார். பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கிக் கொண்டு சாலையில் திரும்பும் போது தம்மம்பட்டியில் இருந்து துறையூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தம்மம்பட்டி போலீசார் ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.