கெங்கவல்லியில் மர்மநபர் பைக் திருடன் சிசிடிவி காட்சி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வடக்கு தெருவில் நூருல் அமீன் என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. இது குறித்து அவர் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி