சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தை திருமணம் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களுக்கான போக்சோ வழக்குகள் அதிகளவில் பதியப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி கணேசன் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விளக்கினர். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.