சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில், மூலவருக்கு 300 கிலோ அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னாபிசேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் 320 கிலோ அரிசி மற்றும் மளிகை சாமான்கள், காய்கறிகளை அன்பளிப்பாக வழங்கினர். கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளால் சிறப்பு அன்னாபிசேகம் செய்யப்பட்டது. அரிசி சாதத்தில் சிவ உருவமும், காய்கறிகளால் அம்பாள் ஸ்ரீ சாகம்பரியும் வடிவமைக்கப்பட்டன. சாகம்பரி அன்னையை வழிபாடு செய்தால் உணவுப்பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். அன்னாபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.