அப்போது அதே கிராமத்தில் விவசாயி கருப்பழகிக்கு சொந்தமான தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்றார். அங்கு மக்காச்சோளத்திற்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள் வராமல் இருக்க மின்வேலி போடப்பட்டதாக நிலத்தின் உரிமையாளர் கருப்பழகி, நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்த விவசாயி சிவகுமார் (53) ஆகிய 2 விவசாயிகள் மீது வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தார்.