கெங்கவல்லி நாய்கள் கடித்தது 5 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவலர் ராஜேந்திரனின் விவசாய தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஐந்து ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடு திரும்பிய ராஜேந்திரன் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கால்நடைத் துறை மற்றும் கெங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி