இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (33) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவாசல் ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். மற்றும் அவரது தம்பி அஜித் குமார் (28) ஆகியோர் மண் அள்ளுவதற்கு அனுமதி உள்ளதா என கேட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் சகோதரர்கள் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர்கள் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அஜித் குமார் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த வீரகனூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மணி, சக்திவேல், அஜித் உள்ளிட்ட நான்கு பேரை வீரகனூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.