சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வழித்தட எண் 23 பேருந்து கடம்பூர் வழியாக தம்மம்பட்டி நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மோதி மரவள்ளி கிழங்கு விவசாயம் நிலத்தில் இறங்கியது. இதில் ஓட்டுநர் குமார் (38) மற்றும் பேருந்தில் பயணித்த சந்தோஷம் (52), சரோஜா (57) ஆகிய மூன்று பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்கள். உடனடியாக அப்பகுதி மக்கள் மூன்று பேரையும் விட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.