தம்மம்பட்டி: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 15 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 18 பேர், கொல்லிமலையில் உள்ள அரபலீஸ்வரர் மற்றும் பெரியசாமி கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு திரும்பியபோது, சேரடி வேலிக்காடு பிரிவு சாலையில் வேன் பிரேக் வயர் துண்டிக்கப்பட்டதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர், மேலும் 3 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி