அந்த பேசியில் செல்போன், பணம், ஐ.டி. கார்டுகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ரெயிலில் இருந்த ரோந்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் தர்மபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விசாரித்தபோது கைப்பேசியை திருடிய அந்த நபர் பாலக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் விசாரித்தபோது ஒடிசா மாநிலம் பூரியை சேர்ந்த சாஜித் என்ற ராஜன் என்பது தெரியவந்தது. மேலும் வேறு கொள்ளைகளில் ஈடுபட்டாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.