ஜலகண்டாபுரம் செலவடை தாசனூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (40) மற்றும் அவரது மனைவி ஜோதி (36) ஆகியோர் நேரு நகரில் வீடு கட்டி வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் அண்ணாமலை (43) ஜோதி தனியாகச் செல்லும்போது தவறாகப் பார்ப்பதாகக் கூறி பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜோதி வீட்டில் விளக்கேற்றிவிட்டு வெளியே வந்தபோது, அண்ணாமலை அவரிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அண்ணாமலையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.