கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, க.புதூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மதி (45) நேற்று மாலை குடும்பத்துடன் மேட்டூர் கிழக்குக்கரை கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, கால்வாயில் அதிக தண்ணீர் வேகம் காரணமாக மதி ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும், தண்ணீரின் வேகம் காரணமாக முடியவில்லை. இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் மதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி