வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பைபாஸ் மேம்பாலம் அருகே, கர்நாடகாவைச் சேர்ந்த 7 பேர் இன்னோவா காரில் சென்றுகொண்டிருந்தனர். அந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேரை பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பெண் ஒருவரும் பரிதாபமாக பலியாகினார். 4 பேர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.