சேலத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த மூன்று பேர் கைது

சேலம் பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகத்திற்கிடமான மூன்று பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோரிமேட்டைச் சேர்ந்த பிரசாந்த், கொல்லப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், பிரவீன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி