தேவூர் பகுதியில் கடல் போல் காட்சி அளிக்கும் காவிரி ஆறு

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி தண்ணீர் செக்கானூர் நீர்மின் தேக்க நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் தேக்க நிலையம், கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க நிலையம், ஊராட்சி கோட்டை நீர்மின் தேக்க நிலையம் உள்ளிட்ட கதவணைகளில் ஆண்டுதோறும் தண்ணீர் தேக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேவூர் அருகே கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணையில் தேக்கப்பட்டுள்ள தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த காட்சியை தேவூர் பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து காவிரி அழகை ரசிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி