செல்போன் பார்த்ததை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் பூலாம்பட்டியை அடுத்த பில்லுக்குறிச்சி காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது விஷ்ணு, பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இரவு, பகல் பாராமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எடப்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி