குள்ளம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், சங்ககிரி தாசில்தார் வாசுகி, தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் காவேரி, செயல் அலுவலர் தம்பிதுரை ஆகியோர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். இம்முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி 161 பேர், வருவாய்த்துறையிடம் 65 பேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக 36 பேர் என மொத்தம் 290 பேர் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி