எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த முத்து (55) என்பவர் நேற்று எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்றபோது, அவர் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டருக்குள் பாம்பு புகுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். உடனடியாக எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்கூட்டருக்குள் பதுங்கியிருந்த விஷப் பாம்பைப் பிடித்துச் சென்றனர்.