தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும். மேலும், சேலம் மேற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை தி.மு.க. நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் என மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. தெரிவித்துள்ளார்.